NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
    காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2025
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ் என்ற புதிய ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

    இது காசா பகுதியில் இஸ்ரேலின் இருப்பை விரிவுபடுத்துவதையும் முக்கிய மூலோபாய பகுதிகளில் முன்னேறுவதையும் நோக்கமாகக் கொண்டது.

    இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்களின்படி, இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (மே 16) இரவு வடக்கு காசாவில் கடுமையான குண்டுவீச்சுகளுடன் தொடங்கியது.

    இதில் காசா நகரத்தின் துஃபா சுற்றுப்புறம் உட்பட, கான் யூனிஸ், ஜபாலியா மற்றும் டெய்ர் அல்-பலாஹ் போன்ற தெற்குப் பகுதிகளில் ஒரே நேரத்தில் ராணுவ நடவடிக்கையும் தொடங்கியது.

    இது காசாவில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையின் அதிகரிப்பைக் குறிக்கிறது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது.

    நோக்கம்

    தாக்குதலை அதிகரித்துள்ளதன் நோக்கம்

    பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவை நிர்வகிக்கும் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸை முற்றிலுமாக தோற்கடித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

    "கிதியோன் சாரியட்ஸ் விரிவான தாக்குதல்களைத் தொடங்கி காசாவில் உள்ள மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்ற படைகளைத் திரட்டியது" என்று ஒரு இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    "இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போரின் நோக்கங்களை அடைவதற்கும் எங்கள் துருப்புக்கள் தெற்கு கட்டளையின் கீழ் தொடர்ந்து செயல்படும்." என்று அவர் மேலும் கூறினார்.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை ஒழிப்பதில் தனது உறுதியை மீண்டும் வலியுறுத்தி உள்ளார். மேலும், வரும் நாட்களில் மேலும் ராணுவ விரிவாக்கம் இருக்கும் என உறுதியளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி

    காசா

    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது  அமெரிக்கா
    காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்  இஸ்ரேல்
    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை  ஹமாஸ்
    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி இஸ்ரேல்

    இஸ்ரேல்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் லெபனான்
    ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணம் கசிவு ஈரான் இஸ்ரேல் போர்
    ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ஈரான் இஸ்ரேல் போர்
    இஸ்ரேல் தாக்குதலுக்கு உரிய பதிலடி; ஈரான் எச்சரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சையத் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்; தலைவரின் மரணத்தை உறுதி செய்தது ஹிஸ்புல்லா இஸ்ரேல்
    லெபனானை அடுத்து ஏமன் பக்கம் திரும்பிய இஸ்ரேல்; ஹவுதி நிலைகள் மீது சரமாரி தாக்குதல் இஸ்ரேல்
    பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம் இஸ்ரேல்

    ஹமாஸ்

    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  இஸ்ரேல்
    இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார் இஸ்ரேல்
    பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்  பாலஸ்தீனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025