Loading...
2035-ல் கிறிஸ்தவத்தை முந்தி உலகின் மிகப்பெரிய மதமாக மாறும் இஸ்லாம்: 2070-ல் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில் அதிக முஸ்லிம்கள் இருப்பார்கள்
2070-ல் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில் அதிக முஸ்லிம்கள் இருப்பார்கள்

2035-ல் கிறிஸ்தவத்தை முந்தி உலகின் மிகப்பெரிய மதமாக மாறும் இஸ்லாம்: 2070-ல் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில் அதிக முஸ்லிம்கள் இருப்பார்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2026
01:19 pm

செய்தி முன்னோட்டம்

வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் கிறிஸ்தவ மதத்தை முந்தி, இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக உருவெடுக்கும் என அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களிடையே காணப்படும் அதிக கருவுறுதல் விகிதம் மற்றும் இளைய வயது மக்கள் தொகையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், முஸ்லிம் பெண்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 3.1 குழந்தைகளாகவும், கிறிஸ்தவ பெண்களுக்கு 2.5 ஆகவும், மற்ற மதப் பெண்களுக்கு சராசரியாக 1.6 ஆகவும் இருந்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் மூத்த மக்கள்தொகை ஆய்வாளர் கான்ராட் ஹாக்கெட் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை

உலகளாவிய மக்கள் தொகை கணிப்பு (2020 - 2070)

தற்போதைய மக்கள் தொகைப் போக்கு தொடர்ந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் உலகின் மத ரீதியான மக்கள் தொகையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்:

கடந்த 2020-ஆம் ஆண்டில் 2.27 பில்லியன் மக்களுடன் கிறிஸ்தவம் முதலிடத்தில் உள்ளது.

அதே வேளையில், 2035-ஆம் ஆண்டில், 2.52 பில்லியன் மக்களுடன் இஸ்லாம் முதலிடத்தைப் பிடிக்கும்.

2070-ஆம் ஆண்டில் இரு மதங்களுக்கும் இடையே சுமார் 3 பில்லியன் இடைவெளி மேலும் அதிகரிக்கும்.

குறிப்பாக, கருவுறுதல் விகிதத்துடன் ஒப்பிடுகையில், மதமாற்றங்கள் மற்றும் மத அடையாள மாற்றங்கள் இந்த வளர்ச்சியில் மிகக் குறைந்த பங்கையே வகிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

2070

2070-ல் இந்தியா, பாகிஸ்தான் & அமெரிக்கா, ஐரோப்பாவின் நிலை என்ன?

2070-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கும்.

அதனைத்தொடர்ந்து இந்தியா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் என பியூ மையம் கணித்துள்ளது.

அடுத்த 40 ஆண்டுகளில் அமெரிக்கா தனது கிறிஸ்தவ பெரும்பான்மையை இழக்கும். தற்போது 62% ஆக உள்ள கிறிஸ்தவர்கள், 2065-க்குள் 50%-க்கும் கீழே குறைவார்கள்.

கனடாவில் 2030-க்குள் கிறிஸ்தவர்கள் 50%-க்கும் கீழ் குறைவார்கள். எந்த மதத்தையும் சாராதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

2070-க்குள் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 17% குறையும்; அங்கு கிறிஸ்தவர்கள் 505 மில்லியனிலிருந்து 324 மில்லியனாகக் குறைவார்கள்.

அதே சமயம் ஐரோப்பாவில் முஸ்லிம்களின் விகிதம் 6%-லிருந்து 13% ஆக உயரும்.

ADVERTISEMENT