இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது பல்வேறு வரலாற்று, அரசியல் மற்றும் மூலோபாய பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிக்கலான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பிரச்சினையாகும்.
இது பற்றி தெளிவாக புரிந்து கொள்ள சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அலசி ஆராய வேண்டும்.
ஜட்டில்
பாலஸ்தீனிய குழுக்களுக்கு எப்போதிலிருந்து ஈரான் உதவி வருகிறது?
1979ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியின் போது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட அந்த ராஜ்யத்தின் அரசரான ஷாவின் அரசாங்கம் கைப்பற்றப்பட்டது.
அதை தொடர்ந்து, முடியாட்சியாக இருந்த ஈரான், குடியரசாக மாறியது.
அயதுல்லா கொமேனி தலைமையிலான புதிய ஈரானிய அரசாங்கம், அப்போதிலிருந்து இஸ்ரேலிய எதிர்ப்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு பாலஸ்தீனிய குழுக்களுக்கு ஆதரவை வழங்கத் தொடங்கியது.
பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் முக்கிய ஆதரவாளராக இருந்து வருகிறது.
குறிப்பாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்(PIJ) ஆகிய இஸ்ரேலுக்கு எதிரான குழுக்களுக்கு ஆயுதங்கள், நிதியுதவி, இராணுவ உதவி மற்றும் அரசியல் ஆதரவை ஈரான் வழங்கி வருகிறது.
எனினும், ஹமாஸுடனான ஈரானின் உறவு உண்மையில் மிகவும் சிக்கலானது.
சினஸ்ல
ஈரானுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சிக்கலான உறவு
ஈரான் ஹமாஸுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்தாலும், ஹமாஸ் குழு, சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த குழுவாகும்.
சன்னி சித்தாந்திற்கு புறம்பான ஷியைட் சித்தாந்தத்தை ஈரான் நாடு பின்பற்றுகிறது.
ஷியைட் மற்றும் சன்னி என்பது இஸ்லாமியத்தில் இருக்கும் உட்பிரிவுகளாகும்.
எனவே, இந்த இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையில் பல பிளவுகள் உள்ளன.
கூடுதலாக, 2011இல் நடந்த சிரிய உள்நாட்டுப் போரின் போது அசாத் ஆட்சிக்கு ஈரான் ஆதரவளித்தது ஹமாஸ் குழுவுக்கு பிடிக்கவில்லை. இதனாலும், ஈரான்-ஹமாஸ் உறவுகளில் பதட்டங்கள் நிலவி வருகின்றன.
எனவே, கடந்த அக்டோபர்-7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் நேரடியாக உதவி இருக்காது என்றே கூறப்படுகிறது.
கோன்
இஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஈரான்
இஸ்ரேல் மீது இருக்கும் கருத்தியல் எதிர்ப்பு காரணமாகவே பாலஸ்தீனிய குழுக்களுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது.
இஸ்ரேல் என்பது மேற்கத்திய நாடுகளின் உதவியோடு நிறுவப்பட்ட ஒரு யூத பெரும்பான்மை நாடாகும்.
மேலும், இஸ்ரேலில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இரண்டாம் உலக போரின் போது, ஐரோப்பாவில் இருந்து தப்பி வந்த யூதர்கள் ஆவர்.
எனவே, ஈரானிய அரசாங்கம் இஸ்ரேலை ஒரு சட்டவிரோத நாடாகக் கருதுகிறது. இஸ்ரேலை அழிக்க பலமுறை ஈரான் அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த கருத்தியல் நிலைப்பாட்டை ஈரானிய மக்களுள் சில பிரிவினரும் ஆதரிக்கின்றனர்.
ஆகவே, பாலஸ்தீனிய குழுக்களுக்கு ஈரான் ஆதரவு தெரிவிப்பது என்பது, இஸ்ரேலுக்கு அந்நாடு மறைமுகமாக தெரிவிக்கும் எதிர்ப்பாகும்.
பிஜ்ல்க்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரிவடைய வாய்ப்பு
இந்நிலையில், தற்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே பெரும் போர் வெடித்துள்ளது.
இந்த போரில் ஈரான் ஈடுபடுவதைத் தடுக்க அமெரிக்கா சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரான் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருக்க, ஒரு பாதுகாப்பிற்காக கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒரு கேரியர் ஸ்டிரைக் குழுவை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நேரடித் தாக்குதல்களை நடத்துவது சாத்தியமில்லை என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மோதல் வெடிப்பதற்கு சாத்தியம் உள்ளது.
இந்த மோதல் விரிவடைந்தால், வளைகுடா நாடுகள் மற்றும் சவுதி அரேபியா உட்பட பல்வேறு அரபு நாடுகளும் இந்த மோதலில் பங்குபெற வாய்ப்புள்ளது.