NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்
    இந்தியா-அமெரிக்கா இன்ஜின் ஒப்பந்தம்.. ஒப்புதல் அளித்த அமெரிக்க பாராளுமன்றம்

    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 31, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்தியா போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையிலான GE-414 ரக இன்ஜின் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது அமெரிக்காவின் GE ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் ஆகிய நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தானது.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், F414 போர்விமானங்களுக்கான ஜெட் இன்ஜினின் தொழில்நுட்பத்தில் 80%-த்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது, இந்தியாவில் அந்த இன்ஜின்களைத் தயாரிப்பது மற்றும் அதன் உரிமத்தை வழங்குவது ஆகியவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.

    இந்த ஜெட் இன்ஜினை இந்தியாவின் LCA (Light Combat Aircraft) MkII போர் விமானத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது இந்தியா.

    இந்தியா

    ஒப்புதல் அளித்த அமெரிக்க பாராளுமன்றம்: 

    இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான, மேற்கூறிய இன்ஜின் குறித்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக, கடந்த ஜூலை 28ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பது குறித்து அறிவிக்கப்பட்டது.

    அறிவிக்கப்பட்டத்தில் இருந்து 30 நாட்களுக்கு இரு அவைகளில் இருந்து எந்தப் பிரதிநிதியும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், அது குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.

    தற்போதும் இந்தியாவுடனான இன்ஜின் ஒப்பந்தத்திற்கு இரு அவைகளிலும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, G20 மாநாட்டில் பங்கேற்க, வரும் செப்டம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியாவிற்கு வருகை தரும் போது, இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    பிரதமர் மோடி
    ஜோ பைடன்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை? பைக்
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி நீரஜ் சோப்ரா
    சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா சந்திரயான்

    அமெரிக்கா

    சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி  காவல்துறை
    உணவகத்தில் கொள்ளையடித்த நபரைக் கண்டறிய உதவிய ஆப்பிள் ஏர்டேக் ஆப்பிள் தயாரிப்புகள்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்? உலகம்
    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்மார்ட்போன்

    பிரதமர் மோடி

    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற முடக்கம் - மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்கும் எதிர்கட்சியினர்? நாடாளுமன்றம்
    பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு  இயக்குனர்
    'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி  எதிர்க்கட்சிகள்

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025