Page Loader
'மணமகள்கள் விற்பனைக்கு': பல்கேரியாவின் வினோத மணமகள் சந்தை 
இந்திய ரூபாய் மதிப்புக்கு 6 லட்சத்துக்கு மேல் ஒவ்வொரு பெண்ணும் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.

'மணமகள்கள் விற்பனைக்கு': பல்கேரியாவின் வினோத மணமகள் சந்தை 

எழுதியவர் Sindhuja SM
Oct 22, 2023
07:38 pm

செய்தி முன்னோட்டம்

உலகம்: பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோராவில், ஒவ்வொரு வசந்த காலத்திலும் சர்ச்சைக்குரிய மணமகள் சந்தை என்பது ஏற்பாடு செய்யப்படுகிறது. 18,000-பலம் வாய்ந்த கலைட்ஜி ரோமா குலத்தினர்களால் நடத்தப்படும் இந்த சந்தையில் மணமகள்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள். கலைட்ஜி ரோமா குலம் என்பது ரோமா மக்களின் துணைக்குழுவாகும். ஐரோப்பா முழுவதும் இந்த குல மக்கள் மீது அதிகமான தப்பெண்ணம் இருப்பதால், அவர்கள் அப்பகுதியின் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களாவர். கலைட்ஜி ரோமா குல கட்டுபாடுகளின்படி, திருமணத்திற்கு முன் காதல் செய்வது, வேறு இனத்தவருடன் திருமணம் செய்து கொள்வது ஆகியவை மிகப்பெரும் குற்றாமாகும்.

லஃபிசம்வ்க்

ஜிப்சி மணமகள் சந்தை ஏன் நடத்தப்படுகிறது?

மேலும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், பல்கேரியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மணமகள் சந்தையில் கலந்துகொண்டு, பெண்களை அவர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படி விலை கொடுத்து வாங்கும் மணமகளை அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். கலைட்ஜி குலத்தில் அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த மணமகள் சந்தை நடத்தப்படும் போது மட்டும் தான் அந்த இனத்தில் பிறந்த இளம் வயதினர் எதிர் பாலினத்தவருடன் உரையாடுகின்றனராம். இந்த மணமகள் சந்தை பல்கேரியாவில் "ஜிப்சி மணமகள் சந்தை" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜிப்சி மணமகள் சந்தையில் விற்பனை செய்யப்படும் மணமகள்களுக்கு நிறைய விதிகளும் விதிக்கப்படுகின்றன.

பிகேவ்ன்ல்

"அழகாக" இருக்கும் பெண்களுக்கு அதிக விலை 

கன்னிப்பெண்களாக இருக்கும் இளம் பெண்கள் மட்டுமே இந்த சந்தையில் விற்கப்படுகின்றனர். இந்த சந்தை நிகழ்ச்சியின் போது, கழுத்து, விரல்கள், காதுகள் மற்றும் பற்களில் தங்க நகைகளை அணிந்த மணமகள்கள் நீண்ட வெல்வெட் பாவாடைகள் மற்றும் பிரகாசமான தொப்பிகளை அணிந்து கொண்டு, ஆண்களுக்கு முன்பு அணிவகுத்துச் செல்கின்றனர். அப்படி அணிவகுத்து செல்லும் பெண்களை அவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண் ஏலம் எடுத்துக் கொள்ளலாம். இந்திய ரூபாய் மதிப்புக்கு 6 லட்சத்துக்கு மேல் ஒவ்வொரு பெண்ணும் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். மிகவும் அழகாக இருப்பதாக கருதப்படும் பெண்களுக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது.

க்ஜ்கவா

பெண்களை ஏலம் போட்டு விற்கும் தந்தைமார்கள் 

இது போன்ற பெண்களை அவர்களது தந்தைமார்களே விலைக்கு விற்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சியூட்டும் விஷயமாகும். ஆனால், இந்த சம்பிரதாயத்தில் இருந்து தங்கள் மகள்களை பாதுகாக்க பல பெற்றோர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இதில் இருந்து காப்பாற்றுவதற்காக, கலைஜி குடும்பங்கள் தங்கள் மகள்களை 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவிடாமல் அவர்களை 16 முதல் 20 வயதுக்குள்ளேயே திருமணம் செய்து வைத்துவிடுகின்றனராம்.

பிஜ்க்வ்ன்ல்

கலைட்ஜி குலத்தினர் இன்றும் இதை பின்பற்றுகிறார்களா?

அப்படி இல்லாமல் ஒரு பெண்ணுக்கு மணமகள் சந்தை மூலம் திருமணம் நடந்தால், அந்த பெண்ணுக்கு யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண்ணை கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க வேண்டுமாம். கலைட்ஜி குலத்தினரின் இந்த பாரம்பரியம் பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்துள்ளதாக வாதிடுகின்றனர் சமூக உரிமை ஆர்வலர்கள். எனினும், தற்போது பல குடும்பங்களும் பெண்களும் இந்த சந்தையை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.