
அமெரிக்காவில் விடுமுறைக்கு சென்ற ஹைதராபாத் குடும்பம் சாலை விபத்தில் காரோடு கருகி உயிரிழந்தனர்
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர், அமெரிக்காவில் நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்தனர். இறந்தவர்களில் தேஜஸ்வினி, ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்குவர். டல்லாஸில் விடுமுறையில் இருந்தபோது அவர்களின் வாகனம் ஒரு லாரியுடன் மோதி தீப்பிடித்தது. சம்பவம் நடந்த நேரத்தில் குடும்பத்தினர் அட்லாண்டாவில் உள்ள உறவினர்களைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். இறந்த குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக ஹைதராபாத்திற்கு கொண்டு வரப்படும்.
விவரங்கள்
தீயில் கருகிய உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்
சம்பவ இடத்தில் தீப்பிடித்த SUV-வின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் X (முன்னாள் Twitter) மூலம் பரவியது. கார் ஒன்று தீவிரமாக எரியும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நேரத்தில், வாகனத்தின் உள்ளே எலும்புகளே மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் உடனடியாக கண்டறிய முடியவில்லை எனவும் கூறப்பட்டது. TEAM Aid என்ற NGO அமைப்பு மூலமாக, உடல்களை இந்தியாவிற்கு அனுப்ப அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.