LOADING...
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2026
08:48 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார். அது எப்படி என்பது குறித்த ரகசிய உரையாடல் அடங்கிய ஆடியோ தற்போது வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' என்ற தாக்குதலில் அலி கமேனி தங்கியிருந்த இல்லம் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டது. இதில் அலி கமேனி கொல்லப்பட்டார். அப்போது அவருடன் இருந்த மொஜ்தபா கமேனி, தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ஏதோ ஒரு பணிக்காக கட்டிடத்திற்கு வெளியே உள்ள முற்றத்திற்குச் சென்றுள்ளார். அதில் அவர் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார்.

தகவல்கள்

கசிந்த ஆடியோவில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள்

பிரிட்டிஷ் நாளிதழான 'தி டெலிகிராப்' வெளியிட்டுள்ள இந்த ஆடியோவில், ஈரானின் நெறிமுறை அதிகாரி மசாஹர் ஹுசைனி பேசிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன: "மொஜ்தபா கமேனி கட்டிடத்திற்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வர முயன்றபோதுதான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தது. இதில் அவரது மனைவி ஹதாத் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மொஜ்தபாவின் காலில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரம்

தாக்குதலின் தீவிரம்

இஸ்ரேல் பயன்படுத்திய 'புளூ ஸ்பாரோ' ஏவுகணைகள் அலி கமேனியின் இல்லத்தை முழுமையாக சிதைத்தன. இதில் அலி கமேனியின் மருமகன் மிஸ்பா மற்றும் ராணுவத் தளபதி முகமது ஷிராசி ஆகியோர் உடல் சிதறிப் பலியாகினர். அலி கமேனியின் மற்றொரு மகனான மோஸ்தபா கமேனி மற்றும் அவரது மனைவி எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

Advertisement

கேள்வி

மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பது குறித்து டொனால்ட் டிரம்ப் கேள்வி

மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார். "மொஜ்தபா கமேனி கடுமையாகக் காயமடைந்துள்ளார் அல்லது இறந்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. போர் தொடங்கியதில் இருந்து அவரை யாரும் பொதுவெளியில் பார்க்கவில்லை," என்று டிரம்ப் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, இன்னும் மக்கள் முன் தோன்றாதது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement