LOADING...
கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்த 'ஐகான்' விருதுகள்: உலகின் மிக வயதான ஆமை ஜோனாதன் முதலிடம்
194 வயதுடைய ஆமைக்கு கின்னஸ் உலக சாதனை ICON விருது

கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்த 'ஐகான்' விருதுகள்: உலகின் மிக வயதான ஆமை ஜோனாதன் முதலிடம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2026
08:46 am

செய்தி முன்னோட்டம்

உலக அளவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது மதிப்புமிக்க புதிய 'ICON' விருதுகளை பெற்றுள்ள சாதனையாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெறும் சாதனையாளர்கள் கலாச்சார அடையாளங்களாகவும், தங்களின் துறைகளில் நீடித்த முத்திரையை பதித்தவர்களாகவும் கொண்டாடப்படுகின்றனர். இந்த நடப்பாண்டின் கின்னஸ் ஐகான் பட்டியலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் வாழ்ந்து வரும் ஜோனாதன் என்ற 194 வயதுடைய ஆமை முதலிடத்தை பிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜோனாதன், உலகிலேயே தற்போது வாழும் மிக வயதான நில வாழ் உயிரினமாகவும், கின்னஸ் புத்தக வரலாற்றிலேயே மிக வயதான ஆமையாகவும் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சாதனையாளர்கள்

சர்வதேச அளவில் முத்திரை பதித்த பிற கின்னஸ் ஐகான்கள்

ஹரி புதா மகர்: எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த நேபாளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி(இரண்டு கால்களும் இல்லாதவர்) மலையேற்ற வீரரான இவர், மனித மன உறுதியின் அடையாளமாக இதில் இடம்பெற்றுள்ளார். ஜான் சீனா: WWE-ல் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்ற லெஜண்ட் மற்றும் அதிகளவில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து சாதனை படைத்த அமெரிக்க நடிகர். பிளாக் பிங்க்: யூடியூப் தளத்தில் உலகிலேயே அதிக பார்வைகளையும், சந்தாதாரர்களையும் பெற்று இசைத்துறையில் வரலாறு படைத்த தென்கொரியாவின் முன்னணி பெண்கள் பாப் இசைக்குழு. கிறிஸ்டினா கோச்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு பெண் விண்வெளி வீராங்கனையாக மிக நீண்ட நாட்கள் தங்கியிருந்து விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் படைத்த நாசா விஞ்ஞானி.

Advertisement