Loading...
அணைக்க வந்த மேக்ரானை சாதுரியமாக தவிர்த்த ஐஸ்லாந்து பிரதமர்; டப்ளின் மாநாட்டில் நடந்த தர்மசங்கட தருணம்; வைரலாகும் வீடியோ
அணைக்க வந்த மேக்ரானை சாதுரியமாக தவிர்த்த ஐஸ்லாந்து பிரதமர்

அணைக்க வந்த மேக்ரானை சாதுரியமாக தவிர்த்த ஐஸ்லாந்து பிரதமர்; டப்ளின் மாநாட்டில் நடந்த தர்மசங்கட தருணம்; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
08:32 am

செய்தி முன்னோட்டம்

அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்டமேஜை கூட்டத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிரை வாழ்த்துவதற்காக அவரை நோக்கி சாய்ந்து அணைக்க முயன்றார். ஆனால் ஐஸ்லாந்து பிரதமர் அவரது தோளில் ஒரு கையை வைத்தபடி சற்று பின்வாங்கி தவிர்த்து, அருகிலிருந்த புகைப்படக் கலைஞரை பார்த்தார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், மேக்ரான் எவ்வித தயக்கமுமின்றி புன்னகைத்தபடியே காணப்பட்டார்.

இத்தாலி பிரதமர்

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடனான மேக்ரானின் முந்தைய வைரல் தருணங்கள்

பெண் உலகத் தலைவர்களுடனான பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் பொதுவெளி உரையாடல்கள் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாவது இது முதல்முறையல்ல.

குறிப்பாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடனான அவரது சந்திப்புகள் பலமுறை கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் மேக்ரான் மெலோனியின் காதில் ஏதோ கிசுகிசுத்தபோது, அவர் கண்களை உருட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அதேபோல் மற்றொரு நிகழ்வில் மேக்ரான் மெலோனியின் கையைப் பிடித்து முத்தமிட்டபோது அவர் அதிருப்தியுடன் காணப்பட்டதும் பெரும் பேசுபொருளானது.

பாரிஸ் சந்திப்பு

பாரிஸ் எலிசி அரண்மனை சந்திப்பும் கருக்கலைப்பு உரிமை விவாதங்களின் பின்னணியும்

கடந்த 2024 ஜூன் மாதம் இத்தாலி தலைமையில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இறுதி அறிக்கையில் கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான வாசகங்களை சேர்ப்பதில் மேக்ரான் மற்றும் மெலோனி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னரே இரு தலைவர்களுக்கும் இடையிலான பொதுவெளி சந்திப்புகள் அதிக கவனம் பெறத் தொடங்கின.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரிஸில் உள்ள எலிசி அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பின் போதும், மேக்ரானின் நீண்ட வரவேற்பால் மெலோனி சற்று ஆச்சரியமடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

ADVERTISEMENT

வைரல் வீடியோ சர்ச்சை

வியட்நாம் பயணத்தின் போது மனைவி பிரிஜிட் உடனான வைரல் வீடியோ சர்ச்சை

அரசியல் தலைவர்களைத் தாண்டி, 2025 மே மாதம் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோதும் மேக்ரான் சர்ச்சையில் சிக்கினார்.

அதிபர் விமானத்தின் வாசலில் நின்றிருந்தபோது அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் தனது இரு கைகளாலும் மேக்ரானின் முகத்தைத் தள்ளுவது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தாங்கள் சாதாரணமாக நகைச்சுவையாக விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அது அன்பின் வெளிப்பாடு என்றும் மேக்ரான் விளக்கமளித்திருந்தார்.

ADVERTISEMENT