Loading...
'எனக்குச் சாவ பயம் இல்லை!' கேப்டனை வெட்டிய ஃப்ளைதுபாய் துணை விமானி அளித்த பகீர் வாக்குமூலம்
கேப்டனை வெட்டிய ஃப்ளைதுபாய் துணை விமானி அளித்த பகீர் வாக்குமூலம்

'எனக்குச் சாவ பயம் இல்லை!' கேப்டனை வெட்டிய ஃப்ளைதுபாய் துணை விமானி அளித்த பகீர் வாக்குமூலம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவரைக் காக்பிட்டில் இருந்த கோடரியால் கொடூரமாகத் தாக்கிய துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, சவுதி அரேபிய அதிகாரிகளிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். விமானத்தை விபத்துக்குள்ளாக்கவே தான் கேப்டனைத் தாக்கியதாகவும், தனக்கு மரண பயம் எதுவும் இல்லை என்றும் 29 வயதான அந்த ஓமன் நாட்டவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அரசு அறிவிப்பு

பயங்கரவாத செயலாக அமீரக அரசு அறிவிப்பு

சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஹம்மாமியிடம் அமீரக பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தை ஒரு பயங்கரவாதச் செயலாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளுடன் ஹம்மாமிக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சவுதி அரேபியா, அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஆய்வு செய்து வருகின்றன.

கேப்டன் சமயோசிதமாகக் காக்பிட் கதவைத் திறந்ததால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னணி

தீவிரவாதப் பின்னணி மற்றும் சமூக வலைத்தள நடவடிக்கை

சிரியா மற்றும் ஓமன் பின்னணி கொண்ட ஹம்மாமி, சிரிய உள்நாட்டுப் போரின் போது அங்குத் தங்கியிருந்த காலத்தில் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவரது நீக்கப்பட்ட எக்ஸ் கணக்கின் பழைய பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், பெண்களுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துக்களை அவர் பதிவிட்டது தெரியவந்துள்ளது.

ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றியபோது தீவிரவாத இணையதளங்களைப் பார்த்ததற்காக விமானம் இயக்கத் தடை விதிக்கப்பட்டு, தீவிரவாத மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

குளறுபடி

வேலைவாய்ப்பு பின்னணி சோதனையில் நேர்ந்த குளறுபடி

ஓமன் ஏர் நிறுவனத்தால் தடை செய்யப்பட்ட ஒருவர், பிப்ரவரி 2026-இல் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் எவ்வாறு துணை விமானியாகச் சேர்க்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக விமானிகளைப் பணியில் அமர்த்தும்போது அமீரகம் கடுமையான பின்னணி சோதனைகளை செய்யும்.

ஆனால் ஹம்மாமி குறித்த தகவல்களை ஓமன் அரசிடம் ஃப்ளைதுபாய் நிறுவனம் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

ஓமன் அரசு எந்தவொரு விசாரணைக் கோரிக்கையையும் பெறவில்லை எனக் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து ஃப்ளைதுபாய் மற்றும் அமீரக அரசு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

ADVERTISEMENT