5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது
முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது, இந்த செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது. செயலாக்க நேரத்தை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) செவ்வாயன்று ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கும், விரைவுபடுத்துவதற்கும், "Work Bundle" என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தளம் துபாயில் வேலை வாய்ப்புகளைத் தேடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு விசா பெறுதலுக்கான செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒர்க் பண்டில் இயங்குத்தளம்
ஒர்க் பண்டில் இயங்குதளமானது "நாட்டில் ரெசிடென்சி மற்றும் வேலைக்கான(அனுமதிகள்) நடைமுறைகளை எளிதாக்கும், எளிமையாக்கும் மற்றும் சுருக்கும்"என்று துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், X-இல் தெரிவித்தார். முன்னதாக, ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாக்கள் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம் மற்றும் 16 ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். இப்போது இந்த தளம், இந்தச் சுமைகளைக் குறைக்கிறது. செயலாக்க நேரத்தை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவை என்று கலீஜ் டைம்ஸில் ஒரு அறிக்கை கூறுகிறது. கூடுதலாக, விண்ணப்பதாரரின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும். அதோடு விசா மையங்களுக்கு தேவையான வருகைகளின் எண்ணிக்கை, ஏழிலிருந்து இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.