கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
நியூ யார்க் காவல் துறையினை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், கொலம்பியா மாணவர்கள் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து, நியூ யார்க் நகர காவல்துறை அதிகாரிகள் கொலம்பியா பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைந்து, ஹாமில்டன் ஹாலில் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று இரவு, போலீஸ் அதிகாரிகள் ஹாமில்டன் ஹாலில் இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக நுழைந்தனர். அதனை தொடர்ந்து, பல எதிர்ப்பாளர்கள் வளாகத்தின் உள்ளும், நியூயார்க்கில் ஆம்ஸ்டர்டாமிலும் காவலில் வைக்கப்பட்டனர் என CNN தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று மாலை, நியூயார்க் நகர மேயர் "இது இப்போதே முடிவுக்கு வர வேண்டும்" என்று அறிவித்ததால், நியூயார்க் காவல் துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்
கொலம்பியா வளாகத்திற்குள் போலீசார்
Mass arrests tonight at CUNY.#ColumbiaUniversityProtest pic.twitter.com/bp21uaZbog— Molly Pitcher (@AmericanMama86) May 1, 2024