NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான்
    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான்

    இந்தியாவைச் சுற்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீனா மற்றும் பாகிஸ்தான்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 18, 2023
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவைச் சுற்றி எல்லைப் பகுதியில் இருக்கும் பல்வேறு உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்தி வருகிறது சீனா. அந்த வகையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து கரகோரம் நெடுஞ்சாலையை மேம்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

    இந்த நெடுஞ்சாலையானது பாகிஸ்தானில் இருந்து சீனா வரை 1,300 கிமீ தூரத்திற்கு நீள்கிறது. இந்த நெடுஞ்சாலையில் ராய்கோட் முதல் தாகோட் வரையிலான 240 கிமீ தூரத்தை மேம்படுத்தவே இரு நாடுகளும் திட்டமிட்டு வருகின்றன.

    இந்தப் பகுதி தான் பாகிஸ்தான் மற்றும் சீனாவை இணைக்கும் பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வழியே பயணிக்கும் பகுதியாகவும் இருக்கிறது.

    மேலும் சீனாவின் நிதி உதவியுடன், நெடுஞ்சாலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தையும் அமைக்கவிருக்கிறது பாகிஸ்தான். இதற்காக பாகிஸ்தானுக்கு 52 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கிறது சீனா.

    சீனா

    சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பிற ஒப்பந்தங்கள்: 

    மேற்கூறிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, சீனாவின் உதவியுடன் பலுசிஸ்தான் மற்றும் டேரா இஸ்மாயில் கான் இடையே 150 கிமீ நீளமுடைய மற்றொரு சாலையையும் கட்டமைக்கவிருக்கிறது பாகிஸ்தான்.

    இவை தவிர, பாகிஸ்தானின் ராணுவத்தை மேம்படுத்துவதற்கு தேவையான பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது சீனா. மேலும், சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் பாகிஸ்தானின் லியோஸ் தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டிருக்கிறது.

    பாகிஸ்தானை தவிர திபெத்திலும் ருடொக் பகுதியில் ரெபெங் மற்றும் டிங்ஸிக்கு இடையே 120 கிமீ நீளத்திற்கான சாலை ஒன்றையும் கட்டமைத்து வருகிறது சீனா. இந்த ருடொக் பகுதியானது LAC (Line of Actual Control) பகுதிக்கு அருகே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சீனா

    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு  இந்தியா
    அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம் ஜப்பான்
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    இசைப் பிரியர்களுக்கு கரோக்கே வசதியை தங்கள் கார்களில் அளிக்கத் திட்டமிட்டிருக்கும் BYD எலக்ட்ரிக் கார்

    பாகிஸ்தான்

    தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி நீரஜ் சோப்ரா
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம் இம்ரான் கான்
    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது  இம்ரான் கான்
    நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் நீரஜ் சோப்ரா

    இந்தியா

    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்பியது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர் வணிகம்
    UPI மூலம் தவறான நபருக்கு அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025