
அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்?
செய்தி முன்னோட்டம்
இந்தியா-சீனா இடையே வடக்கு லடாக்கின் டெப்சாங் சமவெளியில் இருந்து 60 கிமீ தூரத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கு அருகேயுள்ள மலைப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது சீனா.
இந்தக் கட்டுமானங்களை, ஆண்டாண்டு காலமாக இந்தியா கோரும், ஆனால் சீனா கைப்பற்றி வைத்திருக்கும், அக்சாய் சின் பகுதியில் மேற்கொண்டு வருகிறது அந்நாடு.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே மோதல் ஏற்படும் பட்சத்தில், இந்தியாவின் வான்வழித் தாக்குதலில் இருந்து வீரர்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும், தங்களுடைய ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்கும் வகையிலும் புதிய கட்டுமானங்களை எழுப்பி வருகிறது சீனா.
அதுவும், கடந்த சில மாதங்களாக இந்தக் கட்டுமானப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சீனா
ஏன் புதிய பாதுகாப்புக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது சீனா?
அக்சாய் சின் பகுதியில் வான்வெளித் தாக்குதல்களை சுலபமாக மேற்கொள்ள முடிகிற வகையில் சாதகமான இடத்தில் இருக்கிறது இந்தியா. மேலும், பாங்காங் ஏரிக்கு அருகே 13,700 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நியோமா பகுதியிலும் புதிய விமானத் தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது இந்தியா.
இந்த நியோமா பகுதியானது Line of Actual Control எல்லைப் பகுதியில் இருந்து வெறும் 50கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
எனவே, இந்தப் பகுதியில் இந்தியாவிற்கு இருக்கும் சாதகமான சூழலை எதிர்கொள்ளவே தடுப்பு நடவடிக்கையாக புதிய பாதுகாப்புக் கட்டுமானங்களை அக்சாய் சின் பகுதியில் சீனா மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள் வல்லுநர்கள்.