NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்
    லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ்

    ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2024
    02:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், கிரெம்ளினுக்கு அருகிலுள்ள ரியாசான்ஸ்கி ப்ரோஸ்பெக்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே கொல்லப்பட்டார்.

    உக்ரைனில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரில்லோவ் மீது குற்றம் சுமத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த கொலைத்தாக்குதல் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரேனிய பாதுகாப்பு சேவை பொறுப்பேற்றது. ஒரு அறிக்கையில்,"உக்ரைனின் பாதுகாப்பு சேவை மாஸ்கோவில் ஒரு சிறப்பு நடவடிக்கையில் ரஷ்ய ஜெனரல் கிரில்லோவைக் கொன்றது" என்று கூறியுள்ளது.

    சம்பவம்

    ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து இறந்த ஜெனரல்

    ரஷ்ய புலனாய்வு அமைப்புகளின்படி, மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தான் ஜெனரல் கிரிலோவ் கொல்லப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரும் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன.

    "ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் கதிர்வீச்சு, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர்" என்று ஒரு விசாரணைக் குழு மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸால் கூறப்பட்டது.

    RKhBZ எனப்படும் ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு துருப்புக்கள், கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் மாசுபாட்டின் நிலைமைகளின் கீழ் செயல்படும் சிறப்புப் படைகள் ஆகும். அதன் தலைவராக இருந்தவர் தான் ஜெனரல் கிரிலோவ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    மாஸ்கோ
    வெடிகுண்டு மிரட்டல்
    அணு ஆயுதங்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்யா

    ரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி  இந்தியா
    புடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு பிரதமர் மோடி
    அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள்  இந்தியா
    மருத்துவமனை, விளையாட்டு வளாகம் அடங்கிய தனது மாபெரும் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டினார் அதிபர் புதின் இந்தியா

    மாஸ்கோ

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா
    27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா ரஷ்யா
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் பள்ளி மாணவர்கள்
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்

    அணு ஆயுதங்கள்

    அணுகுண்டு பரவலுக்கு எதிராக போராடும் ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு நோபல் பரிசு
    கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா? ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025