Loading...
நடுவானில் திடீர் ஆபத்து! 28,000 அடிகள் கீழே இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; லண்டனுக்கு அவசரமாகத் திருப்பப்பட்டது
நடுவானில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் அவசரநிலை

நடுவானில் திடீர் ஆபத்து! 28,000 அடிகள் கீழே இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; லண்டனுக்கு அவசரமாகத் திருப்பப்பட்டது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
07:55 pm

செய்தி முன்னோட்டம்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 விமானம் நடுவானில் திடீரென அவசரநிலையை அறிவித்தது. அயர்லாந்து வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானம் சுமார் 28,000 அடிகள் வரை கீழே இறங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக சர்வதேச அவசரநிலைக் குறியீடான 7700 சிக்னலைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை எச்சரித்தார்.

திடீர் இறக்கம்

37,000 அடியிலிருந்து 9,000 அடி வரை திடீர் இறக்கம்

போயிங் 777-200ER (G-VIIA) ரகத்தை சேர்ந்த இந்த விமானம், லண்டனின் ஹீத்ரூ டெர்மினல் 5-ல் இருந்து சுமார் 8 மணி நேரம் 40 நிமிடங்கள் பயண நேரத்தைக் கொண்டு புறப்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கத் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்தில், 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுத்து 9,000 அடி உயரத்திற்கு வேகமாகக் கீழே இறங்கியது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் திடீர் இறக்கம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிகாகோ பயணம் ரத்து

லண்டனுக்குத் திரும்பிய விமானம்

விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையைத் தொடர்ந்து, சிகாகோ நோக்கிய பயணத்தை விமானி உடனடியாகக் கைவிட்டார்.

அயர்லாந்து வான்வெளியில் இருந்து மீண்டும் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தை நோக்கிப் பாதையை மாற்றி விமானத்தைத் திருப்பினார்.

விமானத்தில் ஏற்பட்ட குறிப்பிட்ட பிரச்சனை என்ன என்பது குறித்துப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடவில்லை.

இருப்பினும் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருதியே விமானம் மீண்டும் லண்டனுக்குத் திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

அவசரக் குறியீடு

7700 அவசரக் குறியீடு என்றால் என்ன?

விமானப் போக்குவரத்தில் ஸ்குவாக் 7700 என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கிய அவசரநிலை சமிக்ஞையாகும்.

விமானத்தில் மருத்துவ அவசரம், இயந்திரக் கோளாறு அல்லது மோசமான வானிலை போன்ற ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது, விமானிகள் தங்களது டிரான்ஸ்பாண்டரில் 7700 குறியீட்டைப் பதிவு செய்வர்.

இது ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர்களின் ராடார் திரையில் உடனடியாகத் தோன்றி, அந்த விமானத்திற்கு முன்னுரிமை அளித்துத் தரையிறக்கவோ அல்லது அவசர உதவிகளை வழங்கவோ வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT