Page Loader
குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ
நம் நாட்டில் குடும்ப வன்முறை சாதாரணமாகிவிட்டது என்பது வெட்கக்கேடான உண்மை: நடிகை ஏஞ்சலினா ஜோலி

குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ

எழுதியவர் Sindhuja SM
Jan 19, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 9, 2022 அன்று, ஏஞ்சலினா ஜோலி குடும்ப வன்முறைப் பிரச்சினைகளைப் பற்றி ஒரு உருக்கமான உரையை வழங்கினார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அமெரிக்க செனட்டை வலியுறுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பகிர்ந்த ஒரு ட்விட்டர் பயனர், "குடும்ப வன்முறை, குழந்தை துஷ்பிரயோகம் பற்றி ஏஞ்சலினா ஜோலி பேசிய இந்த உரை மிகவும் சக்தி வாய்ந்தது. மில்லியன் கணக்கான பாதிக்கப்பட்டவர்களில் அவரும் அவரது குழந்தைகளும் அடங்குவர்" என்று குறிப்பிட்டிருந்தார். "தேசத்தின் அதிகார மையத்தில் நிற்கும் போதுகூட குடும்ப வன்முறை செய்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கத் தவறிய அமைப்பையும் பற்றி மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது." என்று ஏஞ்சலினா அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் ஏஞ்சலினாவின் வீடியோ