எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம்
காசாவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் அங்கு இயங்கி வரும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், காசாவிற்குள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்ல இஸ்ரேல் தடை விதித்தது. மேலும் மருத்துவமனை உள்ளிட்டவைக்காக எரிபொருள் வழங்கினால், ஹமாஸ் தவறாக பயன்படுத்தலாம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் எரிபொருள் கையிருப்பு கடைசி கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று காலைக்குப் பின் எரிபொருள் வந்து சேராவிட்டால், தங்களது செயல்பாடு படிப்படியாக குறைக்கப்படும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜூலியட் டூமா தெரிவித்துள்ளார்.