NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் 

    'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 09, 2024
    10:26 am

    செய்தி முன்னோட்டம்

    சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே "நிலுவையில் உள்ள பிரச்சனைகளை", குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை அந்த இரு நாடுகளும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் சவூதியின் தற்போதைய ஆட்சியாளர் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் ஏப்ரல் 7 ஆம் தேதி மக்காவில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினர்.

    அதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சவூதி அரேபியா

    பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை 

    இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதில் அவர்களின் கலந்துரையாடல் நிலை கொண்டிருந்தது.

    காஷ்மீர் விவகாரம் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "இரு நாடுகளுக்கு இடையே நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க, குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க, அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்புப் பிரச்சினை என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடும் அதில் இருக்கக்கூடாது என்பதும் புதுடெல்லியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    சவுதி அரேபியா
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    பாகிஸ்தான்

    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? இந்தியா
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
    'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர் இந்தியா
    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி ஐநா சபை

    சவுதி அரேபியா

    ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை ரஷ்யா
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? இந்தியா
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    உலகம்

    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான் விமான நிலையம்
    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் பங்களாதேஷ்

    இந்தியா

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது டெல்லி
    2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன் தொழில்நுட்பம்
    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தேர்தல்
    'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025