ஹஜ் புனித பயணத்தின்போது உயிரிழந்த 645 யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் எனத்தகவல்
இந்த ஆண்டு மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்த 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் இருப்பதாக சவுதி அரேபியாவின் தூதரக அதிகாரி ஒருவர் புதன்கிழமை உறுதிப்படுத்தினார். இறப்புக்கான காரணிகளாக இயற்கையான காரணங்கள் முதல் வானிலை வரை என கூறப்பட்டுள்ளது. ஹஜ்ஜின் போது 550 இறப்புகள் பதிவாகியுள்ளதாக செவ்வாயன்று இரண்டு அரபு இராஜதந்திரிகள் AFP க்கு தெரிவித்ததை அடுத்து புதுப்பிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர். கிட்டத்தட்ட அனைத்து எகிப்தியர்களும் "வெப்பம் காரணமாக" இறந்ததாக ஒரு தூதர் குறிப்பிட்டார். இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியமும் தங்கள் நாடு பிரஜைகள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தின.
ஹஜ் யாத்திரையின் போது வெப்பதின் தாக்கம் பற்றிய வழக்குகள் பதிவாகியுள்ளன
சவூதி அரேபியா இறப்புகள் குறித்த குறிப்பிட்ட தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2,700 க்கும் மேற்பட்ட "வெப்ப" வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய இறப்புகளை உறுதிப்படுத்திய அநாமதேய தூதர், சில இந்திய யாத்ரீகர்கள் சரியான எண்ணிக்கையை வழங்காததால் அவர்களை காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். "இது ஒவ்வொரு வருடமும் நடக்கும்... இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது என்று கூற முடியாது. இது கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. ஆனால் வரும் நாட்களில் மேலும் எண்ணிக்கைகள் தெரியவரும்" என்று அவர் கூறினார். சவூதி ஆண்டுதோறும் ஐந்து நாள் புனித யாத்திரைக்காக கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைக்ளிலும் பில்லியன்களை முதலீடு செய்திருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் காரணமாக அனைவரின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பது சவாலானது.