NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாள நிலச்சரிவு: ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் 6 இந்தியர்கள் மாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாள நிலச்சரிவு: ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் 6 இந்தியர்கள் மாயம்
    60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்

    நேபாள நிலச்சரிவு: ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் 6 இந்தியர்கள் மாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 12, 2024
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போன 60 பேரில் குறைந்தது ஆறு இந்தியர்களும் அடங்குவர்.

    காத்மாண்டுவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்-மக்லிங் சாலையில் 65 பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் சிமல்டால் என்ற இடத்தில் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

    இந்த சோகமான சம்பவம் அதிகாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியது.

    தேடல் முயற்சிகள்

    தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன

    காத்மாண்டு செல்லும் ஏஞ்சல் பேருந்தில் இருபத்தி நான்கு பயணிகள் இருந்தனர்.

    மேலும் 41 பேர் நேபாளத்தின் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் செல்லும் கணபதி டீலக்ஸில் இருந்தனர் என்று சிட்வான் மாவட்ட அதிகாரி கிமானந்தா பூசல் தெரிவித்தார்.

    "மொத்த எண்ணிக்கை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை, ஏனெனில் பேருந்துகள் சாலையில் மற்றவர்களை ஏற்றிச் சென்றிருக்கலாம்" என்று புசல் செய்தி நிறுவனமான AFP இடம் கூறினார் .

    நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும், அதனால் மீட்பு பணிகள் தாமதமாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அறிக்கை

    இந்த சம்பவம் குறித்து நேபாள பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்

    அதிர்ஷ்டவசமாக கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்து மூன்று பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினர்.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் "பிரசந்தா" இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அறிக்கைகளின்படி, ஜூன் நடுப்பகுதியில் இருந்து நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் 90க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்
    நிலச்சரிவு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025