கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் கல்கரிக்கு மேற்கே, சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பைலட் மற்றும் ஐந்து பயணிகளுடன் ஸ்பிரிங்பேங்க் விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சால்மன் ஆர்ம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் விபத்துக்குள்ளானது என்று ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ஒன்ராறியோவின் ட்ரெண்டனில் உள்ள கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தாமதமாகவே தங்களுக்கு தெரிவித்தது என்றும், அந்த மையம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு விமானம் குறித்து தங்களைத் தொடர்புகொண்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிஜிக்
விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை
காணாமல் போன விமானத்தைத் தேடுவதற்காக ராயல் கனேடிய விமானப்படை ஹெர்குலிஸ் விமானம் அனுப்பப்பட்டது.
அவசரகால லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தி நடந்த தேடுதல் பணியில், அந்த விமானம் கல்கேரிக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர்(37 மைல்) தொலைவில் உள்ள போகார்ட் மலைக்கு அருகில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட ஹெர்குலிஸ் குழுவினர் மற்றும் ஆல்பர்ட்டா பார்க்ஸ் மலை மீட்புப் பணியாளர்கள் ஆகியோர் விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒற்றை எஞ்சின் பைபர் பிஏ-32 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.