சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர்
இந்த முறை, சிங்கப்பூர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்(NMP) பதவிக்கு பரிந்துரைப்பட்ட ஒன்பது பேரில் மூன்று பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஒன்பது பேரும் அடுத்த மாதம் பதிவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NMP பதவிகளுக்கு மொத்தம் 30 பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் டான் சுவான்-ஜின் தலைமையிலான நாடாளுமன்றத்தின் சிறப்புத் தேர்வுக் குழுவால் ஒன்பது எம்.பி.க்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பேரையும் ஜூலை 24ஆம் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பால் இரண்டரை ஆண்டு காலத்திற்கு எம்பிக்களாக நியமிப்பார். வரும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் நாடாளுமன்றம் கூடும் போது, இவர்கள் ஒன்பது பேரும் பதிவியேற்பார்கள்.
தேர்தெடுக்கப்பட்ட மூவரின் விவரங்கள்:
நீல் பரேக் நிமில் ரஜினிகாந்த்(60)- சிங்கப்பூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் தலைவராகவும், சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பின் கவுன்சில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றி வருகிறார். ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக(சிங்கப்பூர்) ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருக்கும் இவர், சிங்கப்பூரில் நிதி தொடர்பான கல்வியறிவை அதிகரிக்க பல திட்டங்களை தொடங்கியுள்ளார். சந்திரதாஸ் உஷா ராணி(42)- 'ப்ளுரல்' கலை இதழின் இணை நிறுவனரும், நன்யாங் வணிகப் பள்ளியின் பாட ஒருங்கிணைப்பாளருமான இவர், முதல் முறையாக எம்பி பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜ் ஜோசுவா தாமஸ்(43)- தற்போது சிங்கப்பூர் பாதுகாப்பு சங்கத்தின்(SAS) தலைவராக பணியாற்றி வரும் இவர், சட்ட சங்கத்தின் குற்றவியல் சட்ட உதவி திட்டத்தின் கீழ் தன்னார்வ வழக்கறிஞராகவும் சேவை செய்து வருகிறார்.