
வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டாக்காவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஷோர்கஞ்ச் மாவட்டத்தின் பைரப் பகுதியில் மதியம் 3.30 மணியளவில்(உள்ளூர் நேரப்படி) இந்த விபத்து ஏற்பட்டது.
இதுவரை 20 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பைரப் ரயில் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கிக் கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.
ட்ஜ்வ்க்க்
3 ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததால் அவலம்
முதற்கட்ட தகவலின்படி, டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த எகரோசிந்தூர் கோதுலி என்ற எக்ஸ்பிரஸின் பின்புற பெட்டிகளில் சட்டோகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தினால் 3 ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததாகவும், அந்த பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கி இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பல பிரிவு தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பங்களாதேஷ் தீயணைப்பு சேவை மற்றும் குடிமைத் தற்காப்பு ஊடகத் தலைவர் ஷாஜஹான் சிக்டர் தெரிவுத்துள்ளார்.