டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்
செய்தி முன்னோட்டம்
இந்திய அணியின் அனுபவ லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள டேலி கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி 2026 எலைட் குரூப் பி பிரிவு ஆட்டத்தில், ஹரியானா அணிக்காக விளையாடிய சாஹல் தமிழ்நாடு அணிக்கு எதிராக இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
400-வது விக்கெட் மைல்கல்
தமிழ்நாடு அணிக்கு எதிராக அசத்திய சாஹல்
இந்தப் போட்டிக்கு முன்பாக 399 விக்கெட்டுகளுடன் இருந்த சாஹலுக்கு, 400-வது விக்கெட் மைல்கல்லை எட்ட ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது.
தமிழ்நாடு பேட்ஸ்மேன் அமித் சாத்விக்கை (38 ரன்கள்) ஆட்டமிழக்க செய்ததன் மூலம் தனது 400-வது டி20 விக்கெட்டை பதிவு செய்த சாஹல், 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சாஹலின் அபார பந்துவீச்சால் தமிழ்நாடு அணி 124 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து விளையாடிய ஹரியானா அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பந்துவீச்சாளர்கள் பட்டியல்
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் பட்டியல்
இந்திய அளவில் 400 விக்கெட்டுகளைத் தொட்ட ஒரே பந்துவீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார்; இரண்டாவது இடத்தில் உள்ள புவனேஷ்வர் குமாரை விட 36 விக்கெட்டுகள் முன்னிலையில் உள்ளார்:
1. யுஸ்வேந்திர சாஹல்: 402 விக்கெட்டுகள்
2. புவனேஷ்வர் குமார்: 366 விக்கெட்டுகள்
3. ஜஸ்பிரித் பும்ரா: 354 விக்கெட்டுகள்
4. பியூஷ் சாவ்லா: 329 விக்கெட்டுகள்
5. ரவிச்சந்திரன் அஸ்வின்: 323 விக்கெட்டுகள்