
ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால்
செய்தி முன்னோட்டம்
வியாழன் அன்று (மே 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்ததோடு, கடைசி வரை களத்தில் நின்று 98* ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய இடம் பிடித்தார்.
இந்த 98 ரன்களில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களும் அடங்கும்.
மேலும் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 26 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
இதற்கிடையில், இவ்வளவு பெரிய சாதனைகளுக்கு மத்தியில், ஜெய்ஸ்வால் விராட் கோலியின் சாதனையை சமன் செய்த மற்றொரு சாதனை கவனிக்கப்படாமல் போனது.
jaiswal equals virat kohli s rare record
முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர் அடித்த இரண்டாவது வீரர்
தொடக்க ஆட்டக்காரராக தனது அணியின் இன்னிங்ஸை தொடங்கிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்ட இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் ஐபிஎல் 2019 இல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்னிங்ஸின் போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் முதல் இரண்டு பந்துகளில் விராட் கோலி இரண்டு சிக்சர்களை அடித்திருந்தார்.
அப்போது போட்டி மழை காரணமாக ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போதைய ஆர்சிபி கேப்டனாக இருந்த கோலி, வருண் ஆரோனின் பந்துவீச்சை சிதறடித்து இந்த சாதனையை முதன்முறையாக செய்திருந்தார்.