LOADING...
மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?
மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?

மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2023
12:23 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மகளிர் ஐபிஎல் பிளேஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகளிர் ஐபிஎல்

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

லீக் சுற்றில் அனைத்து அணிகளும் இதர அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் முதலிடத்திலும், மும்பை இந்தியன்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் உ.பி.வாரியர்ஸ் உள்ள நிலையில், இந்த மூன்று அணிகளும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த மூன்று அணிகளுக்கும் தலா இரு போட்டி மீதமுள்ள நிலையில், முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் எனும் நிலையில், தற்போது புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ள மும்பை மற்றும் டெல்லி அணிகள் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் உள்ளன.