மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்?
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) முதல் மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் சில சிறந்த பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடியுள்ளன. மேலும் இரு அணிகளும் தலா இரண்டு ஆட்டங்களில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடக்க உள்ளதால், இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ளது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும். இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரடியாக பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
டெல்லி கேபிடல்ஸ் : மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கப், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் மும்பை இந்தியன்ஸ் : ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), மெலி கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக் சுவாரஸ்யமாக, ஆடவர் ஐபிஎல்லின் தொடக்க சீசனான 2008இன் இறுதிப் போட்டியில் மோதிய ஒரு அணிக்கு இந்தியரும், மற்றொரு அணிக்கு ஆஸ்திரேலியரும் கேப்டனாக இருந்ததை போலவே, மகளிர் ஐபிஎல் தொடக்க சீசனிலும் அமைந்துள்ளது.