Loading...
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 குகேஷ் vs சிந்தாரோவ்: வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 குகேஷ் vs சிந்தாரோவ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 குகேஷ் vs சிந்தாரோவ்: வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
07:32 pm

செய்தி முன்னோட்டம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் 2026 ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நடப்பு சாம்பியன் டி.குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் ஆகியோர் மோதுகின்றனர். இரு வீரர்களும் இருபது வயதானவர்கள் என்பதால் செஸ் வரலாற்றிலேயே மிக இளைய வீரர்கள் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இது அமைந்துள்ளது. அதிகபட்சம் பதினான்கு கிளாசிக்கல் ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 7.5 புள்ளிகளை முதலில் எட்டும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

ரேட்டிங் தரவரிசை

சமீபத்திய ஃபார்ம் மற்றும் ரேட்டிங் தரவரிசையில் சிந்தாரோவின் அசுர வளர்ச்சி

கோவாவில் நடைபெற்ற 2025 உலகக் கோப்பையை வென்றதோடு 2026 கேண்டிடேட்ஸ் தொடரிலும் தோல்வியே சந்திக்காமல் முதலிடம் பிடித்து சிந்தாரோவ் அபார ஃபார்மில் உள்ளார்.

நவம்பர் 2026 தரவரிசையில் சிந்தாரோவ் 2782 ரேட்டிங்குடன் உலகின் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் குகேஷ் 2710 ரேட்டிங்குடன் இருபத்தாறாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

ஓப்பனிங் தயாரிப்பு

ஓப்பனிங் தயாரிப்பு மற்றும் நேருக்கு நேர் சாதனை விவரங்கள்

பதினான்கு ஆட்டங்கள் கொண்ட தொடரில் புதிய ஓப்பனிங் நகர்வுகளை அறிமுகப்படுத்தி எதிராளியின் பலவீனங்களைக் கண்டறிவதே வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

கிளாசிக்கல் செஸ் போட்டிகளில் இருவரும் இதுவரை மூன்று முறை மோதியுள்ளதில் சிந்தாரோவ் இரண்டு வெற்றிகளும் ஒரு டிராவும் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT

ரேபிட் டை-பிரேக்கர்

அழுத்தத்தைக் கையாளுதல் மற்றும் டிசம்பர் 12 ரேபிட் டை-பிரேக்கர்

2024 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டிங் லிரெனை வீழ்த்திப் பட்டம் வென்ற அனுபவம் குகேஷுக்கு அழுத்தத்தைக் கையாளப் பெரிதும் உதவும்.

பதினான்கு சுற்றுகளுக்குப் பிறகு 7-7 எனப் புள்ளிகள் சமநிலையில் இருந்தால் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் ரேபிட் டை-பிரேக்கர் ஆட்டங்கள் உலக சாம்பியனைத் தீர்மானிக்கும்.

ADVERTISEMENT