Page Loader
2011'ஐ ரிப்பீட் பண்ணும் 2023! ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி?
2023 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என ரசிகர்கள் கணிப்பு

2011'ஐ ரிப்பீட் பண்ணும் 2023! ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 05, 2023
09:03 am

செய்தி முன்னோட்டம்

2011இல் இந்திய கிரிக்கெட்டில் நடந்த விஷயங்கள் தற்போது 2023இலும் அப்படியே நடந்து வருவதால், இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். 2011இல் நடந்தது என்ன? ஐபிஎல் 2011 சீசனில் பிளேஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதன் பின்னர் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியது.

will 2011 repeat in 2023

2011'ஐ ரிப்பீட் செய்யும் 2023

இதேபோல் 2011'இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 27வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக கைப்பற்றியது. இந்நிலையில், தற்போது 2023இலும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் குவாலிஃபையரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டரில் வென்று இரண்டாவது குவாலிஃபையரில் தோற்றது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டத்தையும் கைப்பற்றி, 2011'ஐ அப்படியே ரிப்பீட் செய்துள்ளதால், ஒருநாள் உலகக்கோப்பையில் இது தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடந்த நிலையில், 2023இலும் இந்தியாவிலேயே நடப்பது குறிப்பிடத்தக்கது.