'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தனது 28வது திருமண நாளை புதன்கிழமை (மே 24) கொண்டாடினார். இந்நிலையில், புதன்கிழமை ஐபிஎல் 2023 எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் சச்சின் டெண்டுல்கரின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சச்சின் டெண்டுல்கர் தனது திருமண நாளுக்கான மிகச்சிறந்த பரிசு என மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை குறிப்பிட்டுள்ளார்.