ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியாவின் வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி சேர்ப்பு
ஐசிசி தனது கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட மூன்று பேரை புதிதாக சேர்த்துள்ளது. இதன்படி, இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், மகளிர் கிரிக்கெட் முன்னாள் வீராங்கனையான டயானா எடுல்ஜி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜாம்பவானான அரவிந்த டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 112 பேர் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், இவர்களில் 8 பேர் இந்தியர்கள் ஆவர். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில்தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினு மான்காட், டயானா எடுல்ஜி, வீரேந்திர சேவாக் ஆவர்.