தொடரும் வினேஷ் போகட்டின் காத்திருப்பு: CAS தீர்ப்பு ஆகஸ்ட் 16க்கு ஒத்திவைப்பு
இன்று, ஆகஸ்ட் 13ஆம் தேதி வழங்கப்படவிருந்த வினேஷ் போகட்டின் மனு மீதான தீர்ப்பை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) மேலும் தாமதப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விளையாட்டு நீதிமன்றம் தனது காலக்கெடுவை நீட்டிப்பது இது மூன்றாவது முறையாகும். தற்போது வெளியான அறிவிப்பின்படி, நீதிமன்றம் தனது தீர்ப்பை ஆகஸ்ட், 16, வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CAS நடுவர் விதிகளின் பிரிவு 18ஐப் பயன்படுத்துவதன் மூலம், குழு முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. வினேஷ் போகட், தன்னை பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மனு தொடுத்துள்ளார். மேலும் பெண்கள் 50 கிலோ பிரிவில் கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.
Twitter Post
பிரிவு 18 என்றால் என்ன?
OG காலத்தின் போது, குழு விசாரணையின் முடிவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் முடிவெடுக்கும் அல்லது எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்றால், சாட்சிய நடவடிக்கைகளின் முடிவில் இருந்து, விதி 20 க்கு உட்பட்டது. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், இந்த நேர வரம்பு சூழ்நிலைகள் தேவைப்பட்டால், CAS ADD இன் தலைவர் அல்லது துணைத் தலைவரால் நீட்டிக்கப்படலாம். OG இன் காலத்திற்கு வெளியே, குழு ஒரு நியாயமான நேரத்திற்குள் ஒரு முடிவை வழங்கும்.