
யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி
செய்தி முன்னோட்டம்
யுஎஸ் ஓபன் 2023 தொடரில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஆகியோர் அடங்கிய இரட்டையர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 6) நடந்த காலிறுதியில் நதானியேல் லாம்மன்ஸ் மற்றும் ஜாக்சன் வித்ரோ ஆகியோருக்கு எதிராக 7-6 (10) 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.
வியாழக்கிழமை நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில், நிக்கோலஸ் மஹத் மற்றும் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட் ஆகியோரை எதிர்த்து போட்டியிட உள்ளனர்.
முன்னதாக, விம்பிள்டனிலும், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் போபண்ணாவும் எப்டனும், இந்த ஆண்டு தொடர்ச்சியாக இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியை எட்டியுள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வரும் நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Rohan Bopanna & Matthew Edben enter US Open semi-finals#usopen #sportsnews #rohanbopanna pic.twitter.com/L8ze3A8oVX
— Sports Today (@SportsTodayofc) September 6, 2023