மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் பிறந்தநாள் இன்று
2013 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது 16 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகமான இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) தனது 27வது பிறந்தநாளை செவ்வாய்கிழமை கொண்டாடுகிறார். சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இந்திய கிரிக்கெட் அணியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஸ்மிருதி மந்தனா, 4 டெஸ்ட், 78 ஒருநாள் மற்றும் 119 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2017 ஐசிசி உலகக் கோப்பையில் தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, அந்த தொடரில் இந்திய அணி உலகக்கோப்பைக்கு முன்னேறியதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது இந்திய மகளிர் அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக உள்ளதோடு, அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார்.
ஸ்மிரிதி மந்தனாவின் சில மறக்க முடியாத தருணங்கள்
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த மூன்றாவது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா கொண்டுள்ளார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை எட்டிய பத்தாவது அதிவேக வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங் செய்யும் போது தொடர்ந்து பத்து அரைசதம் அல்லது அதற்கு மேல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றார். 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வரலாற்று டெஸ்ட் வெற்றியின்போது, தனது அறிமுக டெஸ்டில் விளையாடிய மந்தனா, அதில் அரை சதம் அடித்தார்.