NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 30, 2024
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலமாக, இரட்டையர் தரவரிசையில் 43 வயதான இந்திய வீரர் ரோஹன் போபண்ணா 'நம்பர் 1' இடத்தை பிடித்துள்ளார்.

    தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ள போப்பண்ணா, தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த அதிக வயதுடைய நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    சர்வதேச டென்னிஸ் சங்கம், டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 5 இடங்களில் எந்த மாற்றமுமில்லை.

    முதலிடத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்கிறார். இரண்டாம் இடத்தில், ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ்,3-வது இடத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் ஆகியோர் உள்ளனர்.

    ரிஷப் பண்ட்

    விபத்து குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார்.

    தனது சொந்த ஊரான உத்தரகாண்ட்டின் ரூர்கிக்கு, தனது சொகுசு காரில் பயணம் செய்த போது இந்த விபத்து நேர்ந்தது.

    இது குறித்து பிசிசிஐக்கு அவர் அளித்த பேட்டி இன்னும் ஓரிரு தினங்களில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    இது குறித்த ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில், விபத்து நேர்ந்தபோது அவருக்கு இருந்த மனநிலை மற்றும் அதிலிருந்து அவர் மீண்ட விதத்தை பற்றி பேசியுள்ளார்.

    இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    துப்பாக்கி சுடுதல்

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா வீராங்கனை சோனமிற்கு வெள்ளிப்பதக்கம்

    எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை தொடரில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மஸ்கர் 252.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சோனம் மஸ்கர் பங்கேற்கும் முதல் உலகக் கோப்பை தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போட்டியில், ஜெர்மனியின் அனா ஜான்சன் 253 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், போலந்தின் அனெட்டா ஸ்டாங்கிவிச் 230.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

    வாலிபால்

    வாலிபால் லீக் போட்டி, பிப்.,15ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது

    ஐ.பி.எல். பாணியில் உள்நாட்டு வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து போட்டியிடும் பிரைம் வாலிபால் லீக் போட்டி 3-வது சீசன், வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் 9 அணிகள் பங்குபெறவுள்ளன.

    அவை, ஆமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ், மற்றும் டெல்லி டூபான்ஸ் ஆகியவை ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு வீரர்கள்
    ஆஸ்திரேலிய ஓபன்
    ஆஸ்திரேலியா ஓபன்
    டென்னிஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    விளையாட்டு வீரர்கள்

    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா  தென் கொரியா

    ஆஸ்திரேலிய ஓபன்

    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி! சானியா மிர்சா
    அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்! சானியா மிர்சா
    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்! விளையாட்டு
    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார் அரினா சபலெங்கா! விளையாட்டு

    ஆஸ்திரேலியா ஓபன்

    பிரெஞ்சு ஓபனிலிருந்து வெளியேறிய நடால்! 2024இல் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற திட்டம்! ரஃபேல் நடால்
    நோவக் ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் நோவக் ஜோகோவிச்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள் இந்திய அணி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    டென்னிஸ்

    2024இல் மறுபிரவேசத்திற்கு தயார் என முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு ஜப்பான்
    யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை யுஎஸ் ஓபன்
    யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி யுஎஸ் ஓபன்
    19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025