ஆசிய கோப்பை 20223 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா
ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளனர். ஒருநாள் வடிவ கிரிக்கெட் ஆசிய கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக 971 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். ரோஹித் ஷர்மா 745 ரன்களுடன் 226 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இந்த தொடரில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி
ஆசிய கோப்பை 2023 தொடரில் ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்கள் கிளப்பில் விராட் கோலியும் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு 50 ஓவர் வடிவத்தில் 13,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்களை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 418 ரன்கள் தேவையாக உள்ளது. இந்த இலக்கை ஏற்றினால், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டெண்டுல்கர் (34,357), சங்கக்காரா (28,016), ரிக்கி பாண்டிங்கிற்கு (27,483) ஓறகு இந்த சாதனையை எட்டும் நான்காவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்