இரண்டாவது முறையாக தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தமிழக மகளிர் கால்பந்து அணி
அமிர்தசரஸில் உள்ள குருநானக் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது. போட்டியின் ஆரம்பத்தில் ஹரியானா வீராங்கனைகள் அபாரமாக விளையாடி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றாலும், இரண்டாவது பாதியில் தமிழ்நாட்டின் பிரியதர்ஷினி எஸ் மற்றும் இந்துமதி கதிரேசன் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். பின்னர் கடைசி வரை போராடியும் ஹரியானா கோல் அடிக்க முடியாததால், தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.