உலகக் கோப்பை பயிற்சி போட்டி- வங்கதேசத்திற்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயத்த இலங்கை
வங்கதேசம் இலங்கை இடையே ஆன முதலாவது உலகக் கோப்பை பயிற்சி போட்டி அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி தொடக்க வீரர்களாக குசல் பெரேரா மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பாக விளையாடிய பாத்தும் நிஸ்ஸங்க 64 பந்தில் 68 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா 24 பந்தில் ஆறு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க ரிட்டயர் ஹர்ட் ஆனார்.
சொதப்பிய நடுவரிசை மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்கள்
குசல் பெரேராவின் அதிரடி ஆட்டத்திற்கு பின் களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 22 ரன்களில் பெவிலியன் திருப்பினார். அதன் பிறகு களம் இறங்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் தனஞ்சய டி சில்வா மட்டும் 55 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி தன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை சேர்த்தது. வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக மெஹந்தி ஹாசன் 9 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நல்ல பேட்டிங் பிட்சில் சுமாரான 263 ரன்களை வங்கதேச அணி செஸ் செய்ய உள்ளது.