Sports Round Up: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா;மேலும் பல முக்கிய செய்திகள்
13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 14வது லீக் ஆட்டத்தில், இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்திற்கான தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி டாஸை, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 43.3 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி, 35 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு ௨௧௫ ரன்கள் பெற்று ஆட்டத்தை வென்றது. இதன்மூலம், இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா.
அதிரடி காட்டிய ஜோஷ் இங்லிஸ்; சுருண்டு படுத்த இலங்கை அணி
நேற்றைய Aus Vs SL போட்டியில், முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 209 ரன்கள் மட்டுமே குவித்தது. எனினும், இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக பந்து வீச தொடங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் டேவிட் வாரனர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தியது. அதன் பிறகு களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் சிறப்பாக ஆடி, தன்னுடைய அணிக்கு 58 ரன்களை சேர்த்தார். இவருடன் ஜோடியாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை காலத்தில் நின்று, அணியின் வெற்றிக்கு காரணமானார்.
மன்கட் முறையில் அவுட் ஆன குசல் பெரேரா
நேற்றைய Aus vs SL போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் ஓவரை ஸ்டார் பந்து வீச்சாளர் ஸ்டார்க் வீசினார். அவரின் முதல் பந்தே, அவுட் என நடுவரிடம் முறையிடப்பட்டது. ஆனால் நடுவர் அதனை நிராகரித்தார். இதனையடுத்து, ஸ்டார்க் வேகமெடுத்து தொடர்ந்து பந்துகளை வீச, மூன்றாவது பந்திலேயே குசல் பெரேரா மன்கட் முறையில் ஆட்டமிழந்தார். அதிர்ச்சி அடைந்த பெரேரா, இது குறித்து, ஸ்டார்க்கிடம் விவாதம் செய்துகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்காளத்தில், கால்பந்து வீரர் ரொனால்டினோ
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். ரொனால்டினோ, பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், நவராத்திரி துர்கா பூஜையிலும் கலந்து கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று, ஸ்ரீபூமி துர்கா பூஜா மண்டலிற்கு வருகை தந்து, பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார். ரொனால்டினோவை, செல்லும் இடங்களில் எல்லாம், கால்பந்து ரசிகர்கள் கூட்டமாக கூடி அவரை வரவேற்றனர்.
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட ஐந்து விளையாட்டுகள் சேர்ப்பு
அடுத்த ஒலிம்பிக் போட்டி, 2028 ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக சேர்ப்பதற்கு ஏற்கனவே ஐசிசி கோரிக்கை வைத்திருந்தது. அதை ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நேற்று மும்பையில் நடைபெற்ற ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தினர் முன்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஷ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டது.