NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 18, 2024
    08:05 am

    செய்தி முன்னோட்டம்

    IND vs AFG 3-வது டி20 போட்டி பெங்களுருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 212 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தில் முடிவை எட்ட இரண்டு முறை (டபுள்) சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியாவும் 16 ரன்கள் எடுக்கவே, மீண்டும் சூப்பர் ஓவர் வீச முடிவு செய்யப்பட்டது.

    2-வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

    அதில் அந்த அணி தோல்வியை தழுவவே, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை முழுவதுமாக வென்றுள்ளது இந்தியா.

    card 2

    கேலோ இந்தியா போட்டிக்கான அனுமதி சீட்டை செயலி மூலம் பெறலாம்

    தமிழகத்தில் நடைபெறவுள்ள 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பொதுமக்கள் நேரில் காண வசதியாக செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அனுமதிச் சீட்டுகளைப் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    இது குறித்து அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

    அதில், இப்போட்டியை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் TNSPORTS (ஆடுகளம்) என்ற செயலியின் மூலமாகவோ https://www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதில் போட்டி நடைபெறும் மாவட்டம், விளையாட்டு மற்றும் தேதியை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.

    பின்னர் தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    card 3

    கேலோ இந்தியா: கபடி போட்டிகள் இன்று தொடங்குகிறது

    6-வது கேலோ இந்தியா இளைஞர் போட்டி நாளை (டிசம்பர் 19-ஆம் தேதி) துவங்குகிறது.

    சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெறும் இந்த போட்டிகள், வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    எனினும் கேலோ இந்தியாவின் மகளிர் கபடி போட்டிகள் மட்டும் இன்று தொடங்குகின்றன. மகளிர் கபடியில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இவை 'ஏ', 'பி' என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹரியானாவுடன் மோதுகிறது.

    card 4

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

    ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினுடன் மோதினார்.

    3 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் துனிசியாவின் ஆன்ஸ்ஜபூர் 0-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் மிரா ஆன்ட்ரீவாவிடம் தோல்வி அடைந்தார்.

    பெலாரசின் அரினா சபலெங்கா, செக்குடியரசின் பிரெண்டா ஃப்ருஹ்விர் டோவாவையும் அமெரிக்காவின் கோ கோ காஃப், சகநாட்டைச்சேர்ந்த கரோலின் டோல்ஹைடையும்,பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியா, ரஷ்யாவின் அலினா கோர்னீவாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால்பதித்தனர்.

    card 5

    டி20 கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்து ரோஹித் ஷர்மா சாதனை

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட்டில், ரோஹித் ஷர்மா சதம் அடித்ததன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, டாஸ் வென்று பேட்டிங் செய்தார்.

    தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.

    தொடர்ச்சியாக அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, ரோஹித் ஷர்மா நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

    ரிங்கு சிங் களமிறங்கியதும், அதிரடி காட்ட துவங்கிய ரோஹித், 64 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். மேலும், 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு வீரர்கள்
    டி20 கிரிக்கெட்
    டி20 தரவரிசை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விளையாட்டு வீரர்கள்

    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா  தென் கொரியா

    டி20 கிரிக்கெட்

    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் மகளிர் கிரிக்கெட்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய் இந்திய கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் புரோ கபடி லீக்
    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை மகளிர் கிரிக்கெட்

    டி20 தரவரிசை

    ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : புதிய உச்சத்தை நோக்கி சூர்யகுமார் யாதவ்! டி20 கிரிக்கெட்
    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்! டி20 கிரிக்கெட்
    ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம் பந்துவீச்சு தரவரிசை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025