NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    08:22 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

    போட்டி முடிந்த பின்னர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வடிவத்தில் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    அதில், "தவறு வருந்துகிறேன். நான் தான் ரன் எடுத்த அழைத்தேன். நன்றாக விளையாடினாய்" என பதிவிட்டுள்ளார்.

    முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    கால்பந்து

    கால்பந்து தரவரிசையில் சறுக்கிய இந்திய அணி 

    பிபா, கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இதில் இந்திய அணி 15 இடங்கள் சரிந்து, 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், இந்திய அணியின் மிக மோசமான தரநிலை இதுதான்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காமல் தோற்றதன் விளைவு இந்த சறுக்கல் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில், ஆசிய கோப்பையை வென்ற கத்தார் 21 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தை பிடித்துள்ளது.

    தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.

    முதல் மூன்று இடங்களில் முறையே அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து பெற்றுள்ளன

    ரஞ்சி கிரிக்கெட்

    தமிழ்நாடு - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

    89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 'சி' பிரிவில் உள்ள தமிழக அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப்புடன் இன்று மோதவிருக்கிறது.

    இந்த 4 நாள் ஆட்டம் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் நடைபெறும்.

    இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இங்கு ரஞ்சி போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும்.

    89-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன

    கிரிக்கெட்

    ஜடேஜாவிற்கு நன்றி கூறிய சர்பராஸ் கான்

    மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சர்பராஸ் கான், 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    போட்டியின் இறுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில், இதுபற்றி கேள்வி எழுப்பட்டபோது, "இப்படி தவறான புரிதலால் அவுட்டாவது விளையாட்டின் ஒரு அங்கம். இப்படி நடப்பது சகஜம். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார். குறிப்பாக களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை சொன்னார். அதற்கு அவருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  கிரிக்கெட் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    விளையாட்டு வீரர்கள்

    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்பியது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி

    டெஸ்ட் மேட்ச்

    37 ஆண்டுகால சாதனையை சமன் செய்த நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டிம் சவுத்தி நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோ சாலமன் காலமானார்; இவரது பின்னணி என்ன? வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல் இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    டெஸ்ட் கிரிக்கெட்

    மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி படைத்த இந்தியா மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 2வது டெஸ்ட் : விளையாடும் லெவனை மாற்றாத ஆஸ்திரேலியா கிரிக்கெட்
    பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன? பெயரும் சுவாரஸ்ய பின்னணியும் பாக்சிங் டே டெஸ்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025