NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 
    இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 13, 2024
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும், நேற்று நடைபெற்ற கார் விபத்தில் பலியானார்.

    கெல்வின், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) 2 மணி 35 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

    பல சர்வதேச போட்டிகளில் முதலிடத்தை பிடித்த 24 வயதான கெல்வின், வருகிறார் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நடந்த கார் விபத்தில், சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளரும் பலியானது, கென்யா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

    ரஞ்சி கோப்பை

    தமிழகம்- கர்நாடகாவிற்கு இடையேயான போட்டி ட்ரா

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் - கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது.

    இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. போட்டியின் முடிவில், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதனால், கர்நாடக அணிக்கு 3 புள்ளிகளும், போட்டியை டிரா செய்ததனால், தமிழக அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

    இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள கர்நாடகா அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு போட்டியில் தோல்வியும், 2 போட்டிகளை டிரா செய்தும் உள்ளதனால், 24 புள்ளிகள் பெற்று 'சி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

    கிரிக்கெட்

    IND vs ENG டெஸ்ட் போட்டி: கே.எல் ராகுல் விலகல்

    இன்னும் இரு தினங்களில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக, தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    மூன்றாவது போட்டி வியாழக்கிழமை ராஜ்கோட்டில் நடைபெறும்.

    டென்னிஸ்

    சர்வதேச டென்னிஸ் தரவரிசையில், இந்திய வீரர் சுமித் நாகல் 98-வது இடத்துக்கு முன்னேறினார்

    நேற்று வெளியான ஏடிபி ஆடவர் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சுமித் நாகல், 23 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் தொடரை வென்றதன் மூலம் அவர் 2019-ஆம் ஆண்டுக்குப்பிறகு ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறியுள்ள இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் தொடரை வென்ற பின்னர் சுமித் நாகல் கூறும்போது,"ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் கனவும் குறைந்தபட்சம் முதல் 100இடங்களுக்குள் வர வேண்டும் என்பதுதான். நான் முன்பு கூறியது போல், சொந்த நாட்டில், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சாம்பியன் பட்டம் வெல்வதைவிட சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை. கடந்த ஆண்டு தரவரிசையில் 500-வது இடத்தில் இருந்தேன்" என தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    விளையாட்டு வீரர்கள்
    ரஞ்சி கோப்பை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்

    விளையாட்டு வீரர்கள்

    'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ் இந்தியா
    Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி ஆசிய விளையாட்டுப் போட்டி

    ரஞ்சி கோப்பை

    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2023 : தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் ஆல்ரவுண்டர் ஜடேஜா! கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்! கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2022-23 : எலும்பு முறிவால் பாதியிலேயே வெளியேறினார் ஹனுமா விஹாரி! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025