ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
நேற்று நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.
14 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது அந்த அணி.
ஆஸ்திரேலியா கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு U 19 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. எனினும், இந்தியா அணி, 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டென்னிஸ்
சென்னை டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றார் சுமித் நாகல்
சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் சுமித் நாகல்.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், சுமித் நாகல், இத்தாலிய வீரர் லுகா நார்டியை எதிர்கொண்டார்.
அவரை 6-1, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வென்றார் சுமித்.
இந்த வெற்றி மூலம், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார்.
அவர் 98-வது இடத்தை பிடிக்கிறார்.
கிரிக்கெட்
SA vs AUS டி20
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறும் சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் முதலாவது டி20 போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று அடிலெய்ட் நகரில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது.
அதிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது
கிரிக்கெட்
ரஞ்சி போட்டி: தமிழக அணிக்கு 319 ரன்கள் இலக்கு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 'சி' பிரிவுக்கான ஆட்டம், தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு இடை கிரிக்கெட் தொடரின் 'சி' பிரிவுக்கான ஆட்டம், தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்று பேட் செய்த கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில், 366 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதனை அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணி, 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்ததாக இரண்டாவது இன்னிங்சில், விளையாடிய கர்நாடகா, 56.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தமிழக அணிக்கு 319 ரன்கள் தேவைப்படுகின்றன.
இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இன்று தமிழக அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடவுள்ளது.