NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்; மேலும் பல முக்கிய செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்; மேலும் பல முக்கிய செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்; மேலும் பல முக்கிய செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 24, 2023
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 24) நடந்த ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ரன்களும் அப்துல்லா சபீக் 58 ரன்களும் எடுத்தனர்.

    தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராகிம் ஜத்ரான் 87 ரன்களும் எடுத்தனர்.

    மேலும், ரஹ்மத் ஷா 77 ரன்கள் எடுத்த நிலையில், 49 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    India secures 17 medal in Para Asian Games Day 1

    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் 6 தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்ற இந்தியா

    சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான திங்கட்கிழமை இந்தியா 17 பதக்கங்களை வென்றுள்ளது.

    இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இந்தியா தற்போது பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

    முதலிடத்தில் உள்ள சீனா 31 தங்கம் உட்பட 83 பதக்கங்களையும், இரண்டாவது இடத்தில் உள்ள ஈரான் 9 தங்கம் உட்பட 24 பதக்கங்களையும், மூன்றாவது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் 6 தங்கம் உட்பட 20 பதக்கங்களையும் வென்றுள்ளது.

    Saudi Arabia set to host 2024 ESports World Cup

    2024இல் சவூதி அரேபியாவில் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பை நடத்தப்படும் என அறிவிப்பு

    2024இல் சவூதி அரேபியாவில் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்த உள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார்.

    இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் தீராத ஆர்வம் கொண்டவராக அறியப்படும் முகமது பின் சல்மான், கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், இ-ஸ்போர்ட்ஸ் மூலம் சவூதி அரேபியாவில் 2030க்குள் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தோடு, முதல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

    சவூதி அரேபியாவில் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும் நிலையில், அந்த நேரத்தில் 8 வாரங்கள் நடக்கும் நிகழ்வாக இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Abudhabi masters super 100 India win women title

    அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற இந்தியா

    அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சூப்பர் 100 போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா சக இந்திய வீராங்கனையான சாமியா இமாத் ஃபரூக்கியை எதிர்கொண்டார்.

    இருவருக்கும் இடையே நடந்த கடினமான ஆட்டத்தில் உன்னதி சாமியாவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, அபுதாபி மாஸ்டர்ஸில் தனது இரண்டாவது பட்டத்தை கைப்பற்றினார்.

    மேலும், மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி டென்மார்க்கின் ஜூலி ஃபின்னே-இப்சென் மற்றும் மாய் சரோவை 21-16, 16-21, 21-8 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினர்.

    இதற்கிடையே, ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் பட்டம் வெல்லவில்லை.

    Reece Topley replaced by Brydon Carse in CWC 2023

    ரீஸ் டாப்லிக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ரீஸ் டாப்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் எனும் வீரர் சேர்க்கப்பட்டுளளார்.

    தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும், இங்கிலாந்து குடியுரிமையுடன் அந்நாட்டு அணிக்காக விளையாடி வரும் பிரைடன் கார்ஸ் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர் மற்றும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார்.

    மேலும், களத்தில் இவரது செயல்பாடு முன்னாள் வீரர் லியாம் பிளங்கெட்டை போலவே இருக்கும் என்பதால் இவரை ஜூனியர் லியாம் பிளங்கெட் என கிரிக்கெட்டர்கள் அழைக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    இ-ஸ்போர்ட்ஸ்
    பேட்மிண்டன் செய்திகள்

    சமீபத்திய

    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா

    ஒருநாள் உலகக்கோப்பை

    INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு வங்கதேச கிரிக்கெட் அணி
    'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய கிரிக்கெட் அணி
    ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு இந்திய கிரிக்கெட் அணி
    INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம் இந்திய கிரிக்கெட் அணி

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சேபிள் சாதனை தடகள போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல்
    ஆசிய விளையாட்டுப் போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா இந்தியா
    Sports Round Up : முக்கிய விளையாட்டுச் செய்திகள் தடகள போட்டி

    இ-ஸ்போர்ட்ஸ்

    2024இல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக சவூதி அரேபியா அறிவிப்பு சவுதி அரேபியா

    பேட்மிண்டன் செய்திகள்

    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். காலிறுதிக்கு முன்னேற்றம்! பிவி சிந்து
    உலக பேட்மிண்டன் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய இந்திய ஜோடி! சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி
    தாய்லாந்து ஓபன் 2023 : நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி! பிவி சிந்து
    தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் சாய்னா நேவால், கிரண் ஜார்ஜ், அஷ்மிதா சாலிஹா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்! சாய்னா நேவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025