உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா; இந்தியாவுக்கான எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக மாறியுள்ளது.
66.66 புள்ளி சதவீதத்துடன், வரவிருக்கும் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
2024 ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்றதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா விளையாடும் இரண்டாவது ஐசிசி நிகழ்வின் இறுதிப் போட்டி இதுவாகும்.
WTC இறுதிப் போட்டி ஜூன் 2025 இல் லார்ட்ஸில் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு தென்னாப்பிரிக்கா இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது இலங்கையை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிக்கான இறுதிப்போட்டி வாய்ப்பு
இதற்கிடையில், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை இரண்டாவது இறுதிப் போட்டிக்கான போட்டியில் இன்னும் உள்ளன.
இவற்றில் ஆஸ்திரேலியா 58.89% புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி (55.88%) புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது.
இந்தியா நேரடியாக தகுதி பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு டெஸ்ட்களிலும் வெற்றி பெற வேண்டும்.
ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவைப் பெற்றால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு போட்டியையாவது இலங்கை டிரா செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கான வாய்ப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தகுதி பெற, இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் நேரடியாக தகுதி பெறலாம்.
இந்தியாவுக்கு எதிரான தொடர் டிராவில் (2-2 அல்லது 1-1) முடிந்தால் இலங்கைக்கு எதிரான தொடரில் வெற்றி பெறுவது அவசியம்.
இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் தொடரை 1-1 என சமன் செய்ய வேண்டும்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த தொடரை 2-0 என வென்றால், அந்த அணி இறுதிப்போட்டியில் நுழைய முடியும்.