ஒருநாள் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா நீக்கம்
ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் காயத்தால் நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தோல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர் நார்ட்ஜேவுக்கு முதுகில் அழுத்த முறிவு இருப்பது தெரிய வந்ததை அடுத்து நீக்கப்பட்டுள்ளார். நார்ஜே இல்லாதது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய அடியாகும். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி நான்கு ஓவர்களில் 46 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டும் எடுத்த மகாலாவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பை அணி
அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் இருந்து அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா நீக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலாக அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் லிசாட் வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுப்பிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி : டெம்பா பவுமா, ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, காகிசோ ரபாடா, டப்ரைஸ் ஷவான்சி, டப்ரைஸ் ஷவான்சி , லிசாட் வில்லியம்ஸ்.