Page Loader
SLvsNED : சமரவிக்ரம அதிரடியால் ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது இலங்கை
சமரவிக்ரம அதிரடியால் ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது இலங்கை

SLvsNED : சமரவிக்ரம அதிரடியால் ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது இலங்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 21, 2023
09:30 pm

செய்தி முன்னோட்டம்

சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை முதல் வெற்றியை பெற்றுள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பினாலும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், லோகன் வான் பீக் 59 ரன்களும் எடுத்து இருவரும் அரைசதம் கடந்தனர். இதன் மூலம் நெதர்லாந்து 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய தில்சன் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Srilanka beats Netherlands

சதீரா சமரவிக்ரம அபார பேட்டிங்கால் இலங்கை வெற்றி

263 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான குஷால் பெரேரா 5 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸங்க அரைசதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார். சரீத் அசலங்க 44 ரன்களும், தனஞ்சய டி சில்வா 30 ரன்களும் எடுத்த நிலையில், சதீரா சமரவிக்ரம கடைசி வரை அவுட்டாகாமல் 91 ரன்கள் குவித்து அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம், ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இலங்கை தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. இதற்கிடையே, இலங்கைக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய ஆர்யன் தத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.