ஒருநாள் உலகக்கோப்பைக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்
ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) பொது விற்பனைக்கு வர உள்ளது. கிரிக்கெட் உலகில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் ஒருநாள் உலகக்கோப்பை நெருங்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் ரசிகர்கள் அதில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு, அதிகாரப்பூர்வ டிக்கெட் இணையதளமான https://tickets.cricketworldcup.com மூலம் உலககக்கோப்பைக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் வாங்கலாம். முன்னதாக, புக் மை ஷோ தளம் மூலம் டிக்கெட் விற்பனை நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக பொதுவிற்பனையை ஐசிசி மூலம் பிசிசிஐ மேற்கொள்கிறது.
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி விபரம்
புதன்கிழமை 15 நவம்பர் அன்று மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டியும், வியாழக்கிழமை நவம்பர் 16 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 19 அன்று இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ரன்னர் அப்பான நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்