Loading...
சவுதி புரோ லீக்: பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்ட ரொனால்டோ; அல் நாசரை 3-1 என வீழ்த்தி அல் அஹ்லி அபார வெற்றி
சவுதி புரோ லீக் போட்டியில் அல்-நாசர் அணியை 3-1 என வீழ்த்தியது அல்-அஹ்லி.

சவுதி புரோ லீக்: பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்ட ரொனால்டோ; அல் நாசரை 3-1 என வீழ்த்தி அல் அஹ்லி அபார வெற்றி

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
06:01 pm

செய்தி முன்னோட்டம்

சவுதி புரோ லீக் (Saudi Pro League) கால்பந்து தொடரில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல் அஹ்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஜித்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில், சக வீரர் சாமு கோஸ்டா வழங்கிய பந்தை அற்புதமாகப் பயன்படுத்திய ரொனால்டோ, கோல் அடித்து அல் நாசர் அணிக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். இதனைத் தொடர்ந்து 18-வது நிமிடத்திலேயே அல் நாசர் அணிக்குப் பொன்னான பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரொனால்டோ உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்பு பறிபோனது.

முதல் பாதி சமநிலை

இரண்டாம் பாதியில் அல் அஹ்லி ஆதிக்கம்

ரொனால்டோ பெனால்டியைத் தவறவிட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றிய நிலையில், முதல் பாதியின் கூடுதல் நேரமான 45+1-வது நிமிடத்தில் அல் அஹ்லி வீரர் கலேனோ அபாரமாக கோல் அடித்து ஆட்டத்தை 1-1 எனச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் அல் அஹ்லி அணி முழு ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் தங்களுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அல் அஹ்லி வீரர் இவான் டோனி துல்லியமாக கோலாக மாற்றித் தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

அல் அஹ்லி வெற்றி

ரோஜர் இபானெஸ் கோலால் வெற்றியை உறுதி செய்த அல் அஹ்லி

இவான் டோனி கோல் அடித்த அடுத்த நான்காவது நிமிடத்திலேயே, அதாவது 75-வது நிமிடத்தில் அல் அஹ்லி வீரர் ரோஜர் இபானெஸ் மற்றொரு கோல் அடித்து அணியின் முன்னிலையை 3-1 என வலுவாக்கினார்.

அதன்பிறகு தோல்வியைத் தவிர்க்க அல் நாசர் அணி வீரர்கள் கடுமையாகப் போராடிய போதிலும், அல் அஹ்லி அணியின் தடுப்பாட்டத்தைத் தகர்க்க முடியவில்லை.

இறுதிவரை 3-1 என்ற முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்ட அல் அஹ்லி அணி, ரொனால்டோவின் அல் நாசர் அணிக்கு அதிர்ச்சித் தோல்வியைப் பரிசளித்து வெற்றி வாகை சூடியது.

ADVERTISEMENT